‘காலா’வுக்கு முன்பே ரிலீஸாகிறது ‘விஸ்வரூபம் 2’?

By செய்திப்பிரிவு

‘காலா’ படத்துக்கு முன்பே ‘விஸ்வரூபம் 2’ படம் ரிலீஸாகலாம் என்கிறார்கள்.

சினிமாத்துறையை ஒழுங்குபடுத்தக் கோரி, கடந்த ஒன்றரை மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். புதிய படங்கள் ரிலீஸாகவில்லை, படப்பிடிப்புகள் நிறுத்தம் என சினிமாத்துறையே முடங்கிக் கிடக்கிறது.

இதில் முக்கியமாக, ஒரே வாரத்தில் பல படங்கள் வெளியாவதால் ஏற்படும் பிரச்சினைகளைக் களைய, புதிய முடிவொன்றை எடுத்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். அதன்படி, படங்கள் சென்சார் செய்யப்படும் தேதியின் அடிப்படையில் ரிலீஸுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, முதல் வாரம் சென்சார் ஆனதும் உடனே அடுத்த வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது.

‘காலா’ படம் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீஸாகும் என வேலை நிறுத்தத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வேலை நிறுத்தம் நடைபெற்று வருவதால், எப்போது ரிலீஸாகும் எனத் தெரியவில்லை. அப்படியே வேலை நிறுத்தம் முடிந்தாலும், ரஜினியின் ‘காலா’வுக்கு முன்பு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படம்தான் ரிலீஸாகும்.

ஏனெனில், ‘காலா’வுக்கு முன்பே ‘விஸ்வரூபம் 2’ படம் சென்சார் ஆகிவிட்டது. ஒருவேளை, வேலை நிறுத்தம் சமயத்தில் விஜய் நடித்துவரும் ‘தளபதி 62’ உள்ளிட்ட சில படங்களுக்கு மட்டும் ஷூட்டிங் நடத்த சிறப்பு அனுமதி அளித்தது போல, ரஜினியின் ‘காலா’ படம் வெளியாவதற்கும் சிறப்பு அனுமதி கிடைக்கலாம்.

இரண்டு படங்களுக்குமே ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

3 hours ago

மேலும்