ஜோதிகா படத்துக்கு போட்டி

By செய்திப்பிரிவு

வித்யாபாலன் நடிப்பில் இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரிமேக் படப்பிடிப்பு ஜூன் 2018 முதல் சென்னையில் தொடங்குகிறது. வித்யாபாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கும் இப்படத்தினை தமிழில் ராதாமோகன் இயக்குகிறார். ஜோதிகா, விதார்த் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். தற்போது இப்படத்துக்கான தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை ரசிர்கள் யூகிக்க ஒரு போட்டியை படக்குழு அறிவித்துள்ளது. அதை கண்டிபிடிக்க க்ளூவாக சில யோசனைகளையும் வெளியிட்டுள்ளது. அதில், முதலாவதாக தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது எனவும், ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது என்றும், மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.

சரியான பதில்களை யூகித்துச் சொல்லும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தளத்துக்கு அழைக்கப்படுவார்கள். ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் இருக்கலாம். மேலும், நடிகர், நடிகை மற்றும் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். போட்டி, வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் படத்தின் தலைப்பை ஒரு பிரபலம் அறிவிப்பார் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்