ஈர்க்கும் காட்சிகள், மிரட்டும் லுக்... - விக்ரம், பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ வீடியோ எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் சிறப்பு வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தங்கலான்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வீடியோ எப்படி? - சுற்றி எரியும் நெருப்புக்கு இடையில் கண்களில் கண்ணீருடன் விக்ரம் புழுங்கிக் கொண்டிருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது வீடியோ. அவருக்கான மேக்கப் மற்றும் மேக்கிங் காட்சிகள் வந்து செல்ல, விக்ரமை சுற்றி நின்று தாக்கும் காட்சிகளில் அத்தனை யதார்த்தம்.

எல்லாவற்றையும் தாண்டி சிங்கிள் ஷாட் ஒன்றில் சண்டையிட்டபடியே முன்னோக்கி ஓடி வருகிறார் விக்ரம். இந்த மொத்த வீடியோ மூலம் தனது கதாபாத்திரத்துக்கு விக்ரம் செலுத்தியுள்ள உழைப்பும், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 min ago

தமிழகம்

15 mins ago

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

52 mins ago

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்