‘நான் அடிமை இல்லை’ பட இயக்குநர் துவாரகீஷ் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பிரபல கன்னட நடிகரும், இயக்குநரும் தயாரிப்பாளருமான துவாரகீஷ் காலமானார். அவருக்கு வயது 81. 1960-களில் கன்னட சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்தவர் துவாரகீஷ். பிறகு தமிழில் வெளியான பல படங்களை கன்னடத்தில் தயாரித்தார்.

சுமார் 48 படங்களைத் தயாரித்துள்ள இவர்,விஷ்ணுவர்தன் நடித்த ‘நீ பரேதகாதம்பரி’ படம் மூலம் இயக்குநராகவும் ஆனார். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த ‘நான் அடிமை இல்லை’, சுரேஷ் நடித்த ‘கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா’ ஆகிய தமிழ்ப் படங்கள் உட்பட 19 படங்களை இயக்கியுள்ளார். பி.வாசு இயக்கத்தில் இவர் தயாரித்த ஆப்தமித்ரா (சந்திரமுகி) ஒரு வருடம் வரை ஓடி கன்னட சினிமாவில் சாதனைப் படைத்தது.

வயது முதிர்வு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த துவாரகீஷ், நேற்று காலை காலமானார். அவர்மறைவுக்கு கன்னட திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ என் நீண்ட நாள் நண்பர் துவாரகீஷின் மறைவுவேதனையைத் தருகிறது. நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி, தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். இனிய நினைவுகள் வருகின்றன. அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 mins ago

விளையாட்டு

12 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்