எம்ஜிஆர் மனைவியாக நடிக்கவில்லை: நடிகை ஷாலினி பாண்டேநேர்காணல்

By செய்திப்பிரிவு

தெ

லுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகிவரும் ‘நடிகையர் திலகம்’, ஜி.வி.பிரகாஷுடன் ‘100 சதவீதம் காதல்’, ஜீவாவுடன் ‘கொரில்லா’ என்று படு பிஸியாக இருக்கிறார் ஷாலினி பாண்டே.

‘தியேட்டர் ப்ளே’ பயிற்சி யோடு திரைத்துறை பயணத்தை தொடங்கிய அவரது பேச்சில் நடிப்புத் துறை சார்ந்த அனுபவம் நன்கு வெளிப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் பேசியதில் இருந்து..

‘அர்ஜுன் ரெட்டி’ என்று தெலுங்கில் ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டு தமிழுக்கு வந்துவிட்டீர்களே?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று மொழிகளை கவனத்தில் வைத்து நான் படங்களை தேர்வு செய்வதில்லை. ஏற்கும் கதாபாத்திரம் என்ன முன்வைக்கிறது என்பதை மட்டுமே கவனிக்கிறேன். ஒரு படத்துக்கு 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்து கவனம் பெறாத பாத்திரத்தை ஏற்பதைவிட, 10 நாட்கள் நடித்து எல்லோருக்கும் பிடித்தவராக மாறுவது எப்படி என்பதில்தான் கவனமாக இருக்கிறேன். அதனால்தான் வெவ்வேறு மொழிகளில் நடிக்கும் சூழல் ஏற்படுகிறது.

தமிழில் ‘நடிகையர் திலகம்’, தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் வர உள்ள சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் நீங்கள் எம்ஜிஆர் மனைவி யான வி.என்.ஜானகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்களா?

வி.என்.ஜானகி, ஜமுனா இப்படி சில முக்கிய பிரபலங்களாக நான் நடிப்பதாக மாறி மாறி தகவல்கள் வெளிவருகின்றன. அது உண்மை அல்ல. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சாவித்ரியின் தோழியாக நான் நடித்திருக்கிறேன். ஒரு தனி நபரின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாகக் கொண்ட படம். நல்ல திரைக்கதை. அதில் நடிப்பது சுவாரசிய அனுபவம்.

சூப்பர்ஹிட் வெற்றிப் பட நாயகியாக நடித்த நீங்கள், பல நாயகிகளில் ஒருவராக, நாயகி யின் தோழியாக நடிக்கும் கதாபாத்திரங்களை எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள்?

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை ஏற்பதற்கு முன்பே நான் ஒப்புக்கொண்டதுதான் ‘நடிகையர் திலகம்’ திரைப்படம். தவிர, ஏற்கெனவே சொன்னதுபோல, சின்ன ரோல், பெரிய ரோல் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. அந்த கதையிலும், கதையின் பாத்திரத்திலும் என் வேலை என்ன என்பதை மட்டுமே பார்ப்பேன். இதனால்தான், பலவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிகிறது. வித்தியாசம் காட்டமுடிகிறது.

‘100 சதவீதம் காதல்’ அனுபவம் எப்படி இருந்தது?

ரீமேக் படங்களில் பெரிதாக நாட்டம் இருப்பதில்லை. இதன் ஒரிஜினலான தெலுங்கு படத்தை பார்த்தேன். நாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள களமாக இருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது. மேலும், தமிழ் ரீமேக் திரைக்கதையில் நிறைய புதிய விஷயங்களும் இருக்கும். அதனால்தான் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொண்டேன்.

ஜீவாவுடன் நடிக்கும் ‘கொரில்லா’ எந்தமாதிரி களம்?

முழுக்க காமெடி களம். பாண்டிச்சேரி படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அடுத்து ஒரு மாதகால படப்பிடிப்புக்காக தாய்லாந்தின் பாங்காக் பக்கம் வந்துவிட்டேன். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் இங்குதான் நடக்கிறது. நிஜத்திலும் காமெடி என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். நகைச்சுவை யாக பேசும் தோழிகளுடன்தான் அதிக நேரம் செலவிடுவேன். இந்த படத்தின் திரைக்கதையும் குபீர் சிரிப்பு காமெடிகள் நிறைந் தது என்பதால், படப்பிடிப்பு களமே ஜாலியாக நகர்கிறது.

திடீரென பாடகியாகவும் அவதாரம் எடுத்தீர்களே, எப்படி?

என் அம்மா முழு பயிற்சி பெற்ற பாடகி. சின்ன வயதில் அவரது பாடல்களை கேட்டு வளர்ந்ததால் எனக்கும் கொஞ் சம் ஆர்வம் உண்டு. அந்த ஆர்வத்தில்தான் என் குரலில் சமீபத்தில் ‘நா ப்ராணமே’ என்ற சிங் கிள் டிராக் பாடல் வெளியானது.

முழுநேர பாடகியாகும் எண்ணம் இருக்கிறதா?

பாடுவது என் பொழுதுபோக்கு. மற்றபடி முழு நேர பாடகியாகும் ஆசை எதுவும் இல்லை. அந்த அளவுக்கு பயிற்சியும் பெறவில்லை.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் நடிக்கிறார். அதில் நடிக்க உங்களுக்கு அழைப்பு வரவில்லையா?

யாரும் என்னை அணுகவில்லை. நானும் யாரையும் அணுகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

8 mins ago

விளையாட்டு

14 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்