மீண்டும் கவுதம் மேனன் - சிம்பு இணையும் ஒன்றாக

By ஸ்கிரீனன்

மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்துக்கு 'ஒன்றாக' எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிம்புவின் கார்த்திக் கதாபாத்திரத்தை தொடர்ச்சியாக வைத்து அப்படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க உள்ளார் இயக்குநர் கவுதம் மேனன். இப்படத்தில் சிம்புவுடன் தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகைச் சேர்ந்த 3 நாயகர்கள் நடிக்க உள்ளனர்.

'ஒன்றாக’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அனுஷ்கா நடிப்பது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் ‘ஜெஸ்ஸி’ கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவும் இதில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விரைவில் சிம்புவுடன் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் நடிகைகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதனைத் தொடர்ந்து 'ஒன்றாக' படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்