என்னை அவமானப்படுத்த முடியாது: ஸ்ருதிஹாசன்

By செய்திப்பிரிவு

‘கேஜிஎஃப்’ படங்களுக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் 22-ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி நடிகை ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில், மது பழக்கத்துக்கு தான் அடிமையாக இருந்ததாகவும் பார்ட்டியில் நிதானமாக இருக்கமாட்டேன், நண்பர்களுடன் குடிப்பதை பெரிதும் விரும்பினேன் என்றும் அதில் இருந்து தற்போது மீண்டு வந்துவிட்டதாகவும் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

இதனால் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதையடுத்து, ஸ்ருதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது நிதானம் பற்றி பேசும் கட்டுரைகளால் என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலன் அளிக்காது. கடவுள் கனிவானவர். வாழ்க்கை நன்றாக இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மாவட்டங்கள்

9 hours ago

மேலும்