தமிழில் மீண்டும் நீல் நிதின் முகேஷ்

By செய்திப்பிரிவு

சி.வி.குமார் தயாரித்து இயக்கிய ‘மாயவன்’ படம் 2017-ம் ஆண்டு வெளியானது. இதில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்தனர். இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லர் படமான இதற்கு ‘மாயா ஒன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், இந்தி நடிகை ஆகன்ஷா ரஞ்சன் கபூர். இப்போது பிரபல இந்தி நடிகர், நீல் நிதின் முகேஷும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இதைப் படக்குழு தெரிவித்துள்ளது. நீல் நிதின் முகேஷ் ஏற்கெனவே விஜய்யின் ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.ஆகன்ஷா ரஞ்சன் கபூர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 mins ago

ஜோதிடம்

20 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்