ராஜா ரங்குஸ்கி விளம்பர பாடலுக்கு நடனமாடவுள்ள யுவன்

By ஸ்கிரீனன்

'ராஜா ரங்குஸ்கி' படத்தை விளம்பரப்படுத்த பாடல் ஒன்றை படமாக்கவுள்ளார்கள். இதில் சிரிஷ் உடன் நடனமாட யுவன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

தரணிதரன் இயக்கத்தில் சிரிஷ், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராஜா ரங்குஸ்கி'. வாசன் நிறுவனம் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன. யுவன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

'ராஜா ரங்குஸ்கி' படத்தை விளம்பரப்படுத்த பாடல் ஒன்றை உருவாக்கவுள்ளார்கள். இதில் நாயகன் சிரிஷ் உடன் நடனமாட யுவன் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 'புன்னகை பூவே' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் யுவன். அப்படத்தைத் தொடர்ந்து இப்போது 'ராஜா ரங்குஸ்கி'யில் நடனமாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுவன் நடனமாட இருப்பது குறித்து இயக்குநர் தரணிதரன் கூறியிருப்பதாவது:

விளம்பர பாடலுக்கு நடனமாட துடிப்பான, உற்சாகமான ஒருவர் தேவைப்பட்டார். ஒட்டுமொத்த குழுவும் யுவனை கேட்க, அவர் நீண்ட தயக்கத்துக்கு பிறகு ஒப்புக் கொண்டார். அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம், அந்த பாடலில் தோன்றி நடனமாடுவது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

இவ்வாறு தரணிதரன் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 mins ago

கல்வி

1 min ago

தமிழகம்

4 mins ago

ஓடிடி களம்

11 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்