2.0 டீஸர் வெளியீடு எப்போது?- ட்விட்டரில் ஷங்கர் தகவல்

By செய்திப்பிரிவு

ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 2.0 படத்தின் டீஸர் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த டீஸர் எப்போது வெளியாகும் என்பது குறித்து இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று (ஜன.26) தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள். 2.0 படத்தின் டீஸர் பணிகள் மும்முரமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிறைய கிராபிக்ஸ் காட்சிகளை உள்ளடக்கியுள்ளோம். பணிகள் முடிந்தவுடன் 2.0 டீஸர் வெளியிடப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்‌ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது.

இப்படம் ஏப்ரலில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

இந்தியா

31 mins ago

ஜோதிடம்

6 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்