‘லியோ’ FDFS | 7 மணி காட்சி இல்லை - தமிழக அரசு கைவிரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘லியோ’ படத்தின் 7 மணி காட்சியை அனுமதிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த தமிழக அரசு, படத்தின் முதல் காட்சி 9 மணிக்கே தொடங்கும் என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை (அக். 19) வெளியாக உள்ளது. இப்படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க கோரி செவன் ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக நேற்று விசாரித்த நீதிபதி, அதிகாலை 4 மணி காட்சிக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியாது என்று கூறி, 7 மணி காட்சி தொடர்பாக உரிய முடிவு எடுத்து அதனை தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு ஆணையிட்டார்.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ‘லியோ’ படத்தின் 7 மணி காட்சியை அனுமதிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த தமிழக அரசு, படத்தின் முதல் காட்சி 9 மணிக்கே தொடங்கும் என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் தமிழக டிஜிபி ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்துக்கு உள்துறை செயலாளர் பி.அமுதா கடிதம் எழுதியுள்ளார்.

முதல் ஆறு நாட்களுக்கு வழக்கமான நான்கு காட்சிகளையும், கூடுதலாக தமிழக அரசு அனுமதித்துள்ள ஐந்தாவது காட்சியையும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை திரையிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உள்துறைச் செயலாளரிடம் கூறியுள்ளது. இன்னொருபுறம், காலை 9 மணிக்கு முன் படத்தை திரையிட அனுமதித்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் டிஜிபி ஷங்கர் ஜிவால் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஏற்கெனவே வெளியிட்ட உத்தரவின்படி ‘லியோ’ படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கே தொடங்க வேண்டும் என உள்துறைச் செயலாளர் அமுதா தனது கடிதத்தில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்