மது பிரச்சினையை பேசும் ‘சாலா’

By செய்திப்பிரிவு

சென்னை: பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி.விஸ்வபிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ள திரைப்படம், ‘சாலா’. எஸ்.டி.மணிபால் எழுதி இயக்குகிறார். இவர் பிரபுசாலமனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். தீரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரேஷ்மா, சார்லஸ் வினோத், நாத், அருள்தாஸ், சம்பத் ராம் உட்பட பலர் நடித்துள்ளனர். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்துள்ளார். தீசன் இசை அமைத்துள்ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் படத்தை வெளியிடுகிறார்.

“மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை இந்தப் படம் பேசுகிறது. ஒரு ஒயின் ஷாப்பை குத்தகைக்கு எடுக்கும் செயல்பாட்டில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்படும் மோதல் மற்றும் அதன் பின்னான பகை ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது. ரியலிஸ்டிக் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது” என்று படக்குழு தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

53 secs ago

தமிழகம்

25 mins ago

உலகம்

17 mins ago

இந்தியா

38 mins ago

சினிமா

35 mins ago

வாழ்வியல்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்