அதர்வாவுக்கு நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம்

By ஸ்கிரீனன்

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

'செம போத ஆகாத', 'ருக்மணி வண்டி வருது', 'இமைக்கா நொடிகள்' மற்றும் 'ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அதர்வா. இப்படங்களைத் தொடர்ந்து 'டார்லிங்' மற்றும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படங்களின் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கும் படத்தில் அதர்வா நடிக்க இருக்கிறார்.

அதன் முதற்கட்ட பணிகள் நீண்ட நாட்களாகவே நடைபெற்று வருகின்றன. பெயரிப்படாத இப்படத்தின் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சாம் இசையமைப்பாளராக பணிபுரிய இதன் படப்பிடிப்பு டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

முதலில் இப்புதிய படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிப்பதாக இருந்தது. தற்போது ஆரோ சினிமாஸ் தயாரிக்கவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்