கத்தி பிரச்சினையைத் தீர்க்க களமிறங்கும் தயாரிப்பாளர்

By ஸ்கிரீனன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'கத்தி' படப்பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவிர தயாரிப்பாளர் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளிக்கு 'கத்தி' திரைக்கு வரவிருக்கிறது.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 'கத்தி' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கப்பட்ட போது செய்திகள் வெளியாகின.

இதனை தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தார்கள். தற்போது மீண்டும் இப்பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.

செப்டம்பரில் இசை, தீபாவளிக்கு படம் என்று 'கத்தி' இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 'லைக்கா' நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் இப்பிரச்சினையை முடிவு கொண்டுவர தீர்மானித்து இருக்கிறாராம்.

இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவிற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஆதாரங்களோடு, இலங்கைத் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து பேச தீர்மானித்திருக்கிறார். இதன் மூலம் இப்படப்பிரச்சினை முடிவு வரும் என்று நினைத்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

கல்வி

39 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்