சந்தானத்தின் ‘கிக்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்: இந்த மாதம் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'கிக்'. கன்னடத்தில் வெளியான 'லவ்குரு', 'கானா பஜானா' , 'விசில்', 'ஆரஞ்ச்' போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சந்தானத்தின் ஜோடியாக, 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜனவரி மாதமே வெளியானது. எனினும் இறுதிகட்ட பணிகள் காரணமாக இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்துவந்தது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் இப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் இன்னும் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

வணிகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்