ரசிகரை தள்ளிவிட்டதால் சர்ச்சை: கமல் தரப்பு விளக்கம்

By ஸ்கிரீனன்

 சமூகவலைத்தளத்தில் பலராலும் பகிரப்படும் 'ரசிகரை தள்ளிவிட்ட' விவகாரம் தொடர்பாக கமல் தரப்பு விளக்கமளித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக கமல் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவில் கமல் மற்றும் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் இருவரும் கீழே இறங்கி வருவது போலவும், அப்போது கமல் அருகே வந்த ரசிகரை கமல் தள்ளிவிடுவது போலவும் இருந்தது.

இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு, இப்படி ரசிகரை தள்ளிவிடும் ஒருவர் எப்படி அரசியலில் நிலைக்க முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இது தொடர்பாக கமல் தரப்பில் விசாரித்தபோது, "இந்த வீடியோ மிகவும் பழமையானது. முதலில் கமல் சார் கீழே இறங்கி வரும்போது, அவருடைய காலில் விழுவதற்கு வந்தார் அந்த ரசிகர். எப்போதுமே கமல் சாருக்கு காலில் விழுவது பிடிக்காது. இதனால் அந்த ரசிகரை காலில் விழக்கூடாது என்ற ரீதியில் தடுத்தார்" என்று தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

மேலும்