தமிழ் சினிமாவின் வளர்ச்சி பெரிதாக இருக்கிறது: இயக்குநர் பிரபுதேவா பேட்டி

By மகராசன் மோகன்

கிட்டத்தட்ட மும்பைவாசியாகவே மாறிவிட்டார் பிரபுதேவா. தனது இயக்கத்தில் நவம்பரில் ரிலீஸாகவுள்ள ‘ஆக் ஷன் ஜாக்ஸன்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள், ரெமோ இயக்கத்தில் ‘ஏபிசிடி - 2’ படத்தில் நடிப்பது, அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கவுள்ள ‘சிங் ஈஸ் பிளிங்’ கதை விவாதம் என்று பரபரப்பாக இருக்கிறார். ‘‘தமிழில் படங்களை இயக்க எனக்கும் பிரியம்தான். இருந்தாலும், இங்கே புதிது புதிதாக பல இயக்குநர்கள் வந்து மிரட்டுவதை பார்க்கும்போது பயமாக இருக்கிறது’’ என்று சிறு புன்னகையோடு பேசத் தொடங்கினார், பிரபுதேவா.

‘ஆக் ஷன் ஜாக்ஸன்’ எப்படி வந்திருக்கிறது?

அஜய் தேவ்கனுடன் சேர்ந்து முதல் முறையாக வேலை பார்க்கிறேன். இது முழுக்க பொழுதுபோக்கு படமாகத்தான் இருக்கும். காதல், எமோஷன், பிளாஷ்பேக் என்று எல்லாவற்றையும் கலந்திருக்கிறேன். ‘ரவுடி ரதோர்’ படத்தைப்போல இந்தப்படத்தையும் குழந்தைகள் விரும்புவார்கள். இந்தப்படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நான் நடனம் அமைத்திருக்கிறேன். ஸ்டெப்ஸ் எல்லாம் நல்லா வந்திருக்கு. அதை இப்போ ஸ்கிரீன்ல போட்டுப்பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு. இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து சேர்த்திருக்கோம். நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்

‘சிங் இஸ் பிளிங்’ படத்தின் வேலையை தொடங் கும் முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்திருக் கிறீர்களே?

பாலிவுட்டில் இப்படித்தான். எந்த ஒரு பெரிய பட்ஜெட் படத்தின் ரிலீஸ் தேதியையும் முன்பே அறிவிப்பது அங்கு இயல்பாகிவிட்டது. அந்த நேரத்தில் 95 சதவீதம் வேறு எந்த பெரிய பட்ஜட் படமும் ரிலீஸாகாது. பொதுவாக ஸ்டார் வேல்யூ படம் ரிலீஸாகும்போது முதல் வார கலெக்‌ஷன் ரொம்பவே முக்கியமானது. அதை திட்டமிட்டுத்தான் ஒவ்வொருவரும் முன்பே ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள். அப்படித்தான் ‘சிங் இஸ் பிளிங்’ படத்தினை நவம்பரில் தொடங்கி 2015 ஜூலை 31 ரிலீஸ் செய்ய உள்ளோம்.

பாலிவுட் இயக்குநர் என்ற அனுபவத்தோடு கோலிவுட் சினிமாவை எப்படி பார்க்கிறீர்கள்?

இங்கும் நிறைய பெரிய ஆட்கள் இருக்கிறார்கள். அங்கும் இருக்கிறார்கள். இரண்டு இடங்களிலும் பிளஸ் மைனஸ் உண்டு. தமிழ் சினிமாவில் டிரெண்டியாக நிறைய யோசிக்கிறாங்க. ப்ரெஷ்ஷான விஷயங்கள் நிறைய வெளிப்படுகிறது. தமிழ் சினிமாவோட இன்றைய வளர்ச்சி ரொம்பவே பெரிதாக இருக்கிறது.

உலகக்கோப்பை கால்பந்தாட்டம் நடக்கிறதே, நீங்கள் பார்க்கிறீர்களா?

எடிட்டிங் வேலை பிஸியிலும் நான் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தவறாமல் பார்க்கிறேன். சின்ன வயதில் பள்ளியில் படிக்கும் போது கால்பந்துதான் வாழ்க்கை என்று ஆடித் தீர்த்த நாட்கள் உண்டு. கால்பந்தில் பிரேசில் அணியின் விளையாட்டு ரொம்பவே பிடிக்கும்.

இயக்கத்தில் கவனம் செலுத்துவதால் நடனத்தில் கவனம் செலுத்துவது குறைந்திருக்கிறதா?

நடனம் அமைக்கும் வாய்ப்புகளை நான் தவிர்க்கவில்லை. இப்போதும் மற்றவர்களுடைய படங்களுக்கு நடனம் அமைக்க நான் தயார்தான். நேரம் கிடைத்தால் நிச்சயம் செய்வேன். நடனம் இல்லாமல் என்னை நானே நினைத்துப்பார்க்க முடியாது. அதுக்கான ஒரு நல்ல வாய்ப்பா இப்போ ‘ஏபிசிடி-2’ பட வேலைகள் தொடங்க இருக்கிறது. எப்படியும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு நடனத்தை சுவாசிக்கலாம். அமெரிக்காவில் இருந்து பல டெக்னீஷியன்கள் இதற்காக வருகிறார்கள். 3டி படமான இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகும் படம். ரொம்பவே மெனக்கெடல்கள் இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் போகிறோம். இயக்கம் என்பதை கடந்து முழுக்க ஒரு நடிகனாக கொஞ்ச நாட்கள் இருக்கப்போகிறேன். அந்த பொழுதுகளை நினைக்கவே சந்தோஷமாக இருக்கு.

உங்களோட ‘வான்ட்டட்’ படத்தின் மூலம் பிரகாஷ் ராஜை ஹிந்திக்கு அறிமுகப்படுத்தினீங்க. நீங்க ளும், பிரகாஷ்ராஜும் நெருக்கமான நண்பர் களாமே?

எங்கள் நட்பை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. சினிமா என்கிற ஒரு விஷயம்தான் எங்களை இணைத்தது என்று சொல்ல முடியாது. அதையெல்லாம் கடந்த ஒரு புரிதல் உண்டு. எப்போ, எப்படி நண்பர்களானோம் என்பதெல்லாம் தெரியாது. நல்ல நடிகன் என்பதையும் தாண்டி பிரகாஷ் ராஜிடம் எத்தனையோ விஷயங்களை கவனித்திருக்கிறேன். அவர் ஒரு தன்மையான மனிதர்.

சோனாக் ஷி சின்ஹா எப்படி இருக்காங்க?

நல்ல பொண்ணு. சின்ஹாவுக்கு நடிப்பு மேல அப்படி ஒரு காதல். ‘ஆக் ஷன் ஜாக்ஸன்’ படத்தில் அவங்களோட சேர்ந்து யாமி கௌதம், மனஸ்வி என்றொரு மிஸ் இந்தியா பொண்ணும் நடிச்சிருக் காங்க. எல்லோருக்குமே நல்ல கேரக்டர். காதல் காட்சிகள் அவ்வளவு லவ்லியா வந்திருக்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்