ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பயோபிக்கில் ஜீவா?

By செய்திப்பிரிவு

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது. இதில் சூர்யா நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால்,அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி பயோபிக்கில் நடிகர் ஜீவா நடிக்க இருப்பதாகவும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஆந்திராவில் கூறப்படுகிறது.

ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் அம்மாநில முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கைக் கதை, ‘யாத்ரா’ என்ற பெயரில் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. அதில் மம்மூட்டி நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்கிய மஹி வி ராகவ், ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கைக் கதையையும் இயக்க இருக்கிறார்.

அடுத்த வருடம் ஆந்திர மாநில தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்