774 திரைகள்; குறையாத வரவேற்பு - ரஷ்யாவில் ஆதிக்கம் செலுத்தும் ‘புஷ்பா தி ரைஸ்’

By செய்திப்பிரிவு

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் ஒரு மாதத்திற்கும் மேலாக ரஷ்யாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பஹத் பாசில் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’. பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டை கொண்ட இப்படம் உலக அளவில் ரூ.365 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது.

இப்படம் கடந்த மாதம் ரஷ்யாவில் வெளியிடப்பட்டது. படம் இதுவரை ரஷ்யாவில் 1.02 கோடி ரூபிளை வசூலித்துள்ளது. மேலும், ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட திரைகளின் எண்ணிக்கையில் எந்தக் குறையும் இல்லாமல் ரஷ்யாவில் 774 திரைகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி ஒருமாதம் நிறைவு பெற உள்ள நிலையில் படத்திற்கு ரஷ்யாவில் ரசிகர்களிடையே வரவேற்பு குறையவில்லை.

முன்னதாக ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷராஃப் நடிப்பில் இந்தியில் வெளியான ‘வார்’ திரைப்படம் தான் ரஷ்ய டப்பிங்கில் இந்திய படங்களில் அதிகபட்ச வசூல் சாதனையை படைத்தது. அப்படத்தின் வசூல் 1.7 கோடி ரூபிள். தற்போது வரை 1.02 கோடி ரூபிள் வசூலை எட்டியிருக்கும் ‘புஷ்பா தி ரைஸ்’ விரைவில் ‘வார்’ படத்தின் சாதனையை முறியடிக்கும் என கணிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

57 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்