ரசிகர்களை சந்திக்கிறார் ராஷ்மிகா மந்தனா

By செய்திப்பிரிவு

விஜய் ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, அதன் இசை வெளியீட்டு விழாவில் ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு ஆடினார். அப்போது அவர் பேசும்போது, இந்த விழாவில் உங்கள் முன்னால் பேசுகிறேன் என்பதை நம்ப முடியவில்லை. விஜய்யின் ‘கில்லி’ படத்தை, என் அப்பாவுடன் பார்த்தேன். அதுதான் நான் பார்த்த அவரின் முதல் படம். அப்போதே அவர் ரசிகையாகி விட்டேன் என்று கூறினார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில், “உங்களில் சிலரை (இசை வெளியீட்டு விழாவில்) சந்திக்க நேர்ந்தது. உங்களை நேரில் சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியானது. உங்கள் அன்பை உணர்ந்தேன். அதை உங்களுக்குத் திருப்பி தருவதற்கான வழிகளில் ஒன்றுதான் பாடல்கள். விரைவில் உங்களை ஜூம் அழைப்பிலோ, இன்ஸ்டா நேரலையிலோ சந்திக்க விரும்புகிறேன். உங்களுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

10 mins ago

விளையாட்டு

26 mins ago

வாழ்வியல்

35 mins ago

ஓடிடி களம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்