புஷ்பா 2 - விலகினார் விஜய் சேதுபதி

By செய்திப்பிரிவு

அல்லு அர்ஜுன் நடித்து வெற்றி பெற்றப் படம், ’புஷ்பா’. கடந்த டிசம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். ராஷ்மிகா மந்தனா, பஹத் ஃபாசில், தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.

தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இப்போது இதன் அடுத்த பாகம் தொடங்க இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி, வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.

அவர் மனைவியாக பிரியாமணி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ’புஷ்பா 2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ’ஜவான்’ படத்தில் மட்டுமே அவர் வில்லனாக நடிக்கிறார் என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’புஷ்பா’ முதல் பாகத்தில் பகத் பாசில் கேரக்டரில் விஜய் சேதுபதிதான் நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்