வட மாநிலங்களில் கிடைத்த வரவேற்பு - ரன்வீர் சிங்கின் படத்தை விஞ்சிய புஷ்பா

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ரன்வீர் சிங்கின் '83' படத்தைவிட அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது. கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

வெளியாகி ஆறு வாரம் ஆன நிலையிலும் இன்னும் சில தியேட்டர்களில் படம் ஓடுகிறது. இந்தி பேசும் மக்கள் வசிக்கும் வட்டாரங்களில் கூட இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்பின் காரணமாக மும்பை வட்டாரத்தில் ரன்வீர் சிங் நடித்த '83' படத்தை விட 'புஷ்பா' நல்ல வசூலை ஈட்டியுள்ளது. மும்பையில் மட்டும் ரூ. 35.89 கோடி வசூலித்து இந்தப் பிராந்தியத்தில் அதிக வசூல் செய்த படங்களில் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளது 'புஷ்பா'. அக்‌ஷய் குமார் நடித்த சூர்யவன்ஷி படம் ரூ.81.43 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.

ரன்வீர் சிங்கின் '83' படம் ரூ.34.03 கோடி மூன்றாமிடமும், சல்மான் கான் – ஆயுஷ் ஷர்மா நடித்த ஆன்டிம் – தி ஃபைனல் ட்ரூத் படம் ரூ. 11.53 கோடி வசூல் செய்து அதற்கடுத்த இடத்திலும் உள்ளது. மும்பை மட்டுமல்ல சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், அசாம் மற்றும் ஒடிஷா மாநிலங்களிலும் '83' படத்தை விட 'புஷ்பா' சிறப்பான வரவேற்பையே பெற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் '83'. கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், ஜீவா, அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இந்திய அணியின் வீரர்களாக நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் ‘83’ படம் ரூ.13 கோடி முதல் 14 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் கரோனா பரவல் அதன் வசூலை வெகுவாக பாதித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்