’புஷ்பா’ அப்டேட்: ஃபகத் பாசில் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

'புஷ்பா' படத்தில் வில்லனாக நடிக்கும் ஃபகத் பாசிலின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்து வருகிறார்கள்.

கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முதல் பாகம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடித்து வருகிறார் ஃபகத் பாசில்.

தற்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் படக்குழு படமாக்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து 'புஷ்பா' படத்தில் ஃபகத் பாசிலின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் பன்வார் சிங் செகாவத் என்ற ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ஃபகத் பாசில். மொட்டைத் தலையுடன் இருக்கும் அவரது தோற்றத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்