'உப்பெனா' இயக்குநர் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்?

By செய்திப்பிரிவு

'உப்பெனா' இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாகியுள்ள தெலுங்குப் படம் 'உப்பெனா'. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கியுள்ள இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியானது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வாரத்திலேயே உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த வெற்றியால் 'உப்பெனா' படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

'உப்பெனா' வெற்றியால் புச்சிபாபு சனா இயக்கவுள்ள அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 2 படங்கள் கையெழுத்திட்டு இருப்பதால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே 'உப்பெனா' இயக்குநரின் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது.

இதில் ஜூனியர் என்.டி.ஆரை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அவருக்கும் 'உப்பெனா' படம் மிகவும் பிடித்திருப்பதால், அவர் சம்மதிக்க வாய்ப்புகள் அதிகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினத்தைப் பின்புலமாகக் கொண்டு விளையாட்டுக் கதை ஒன்றைத் தான் அடுத்ததாகப் படமாக்கவுள்ளார் புச்சிபாபு சனா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்