நீதித்துறையின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது - ஜாமீனில் வெளிவந்த ராகினி திவேதி பகிர்வு

By ஐஏஎன்எஸ்

பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு செப்டம்பரில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 16 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து ராகினி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் பெங்களூரு மாநகர முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினர். இதை விசாரித்த நீதிமன்றம், சஞ்சனாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆனால் ராகினி திவேதிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இந்நிலையில் 150 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த வாரம் ராகினிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த ராகிணி பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. தனது சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிடவில்லை.

நேற்று (30.01.21) முதல் முறையாக ஊடகங்களை சந்தித்த ராகினி திவேதி நீதித்துறையின் மீது தனக்கிருந்த நம்பிக்கை அதிகரித்திருத்திருப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

மற்ற குடிமகன்களைப் போலவே என்னுடைய உரிமைகளும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ பாதுகாக்கப்பட வேண்டும். கடவுளில் ஆசிர்வாதத்தால் தீமையை வெல்வேன். என்னுடன் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என் குடும்பம், ரசிகர்கள்தான் எனது பலம். நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு ராகினி திவேதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 mins ago

கல்வி

2 mins ago

தமிழகம்

5 mins ago

ஓடிடி களம்

12 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்