இழுபறிக்குப் பின் இரவில் வெளியான 'க்ராக்': இயக்குநர் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

இழுபறிக்குப் பின் இரவுக் காட்சி முதல் 'க்ராக்' வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் கோபிசந்த் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

கோபிசந்த் மாலினெனி இயக்கத்தில் ரவி தேஜா, சமுத்திரக்கனி, ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'க்ராக்'. தாகூர் மது தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

நேற்று (ஜனவரி 9) இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காகவே கடந்த 10 நாட்களாக படக்குழுவினர் தீவிர விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், ஸ்கிரீன் சீன் நிறுவனம் தொடுத்த வழக்கால், திட்டமிட்டபடி 'க்ராக்' வெளியாகவில்லை.

திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்த நிலையில், படம் வெளியாகாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். காலை, மதியம், மாலை எனத் தொடர்ச்சியாகக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுக் கொண்டே இருந்தன. பின்பு, 'க்ராக்' வெளியீடு ஒத்திவைப்பு எனத் தகவல் பரவியது. ஆனால், அதனைப் படக்குழு மறுத்தது.

பின்பு இரவு 8 மணிக்கு நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 10 மணி காட்சிக்கு வெளியானது 'க்ராக்'. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ரவி தேஜா, ஸ்ருதிஹாசன், வரலட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே ரசிகர்களின் காத்திருப்புக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், 'க்ராக்' இயக்குநர் கோபிசந்த் மாலினெனி தனது ட்விட்டர் பதிவில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"என்னைப் பொறுத்தவரை சினிமாவின் மீதான ஆர்வம் மிகப்பெரியது. இந்த சங்கராந்தியில் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதற்காக என்னுடைய குடும்பத்தை 100 நாட்கள் பிரிந்து இரவும் பகலும் பணியாற்றியது கடினமாக இருந்தது. வாழ்க்கையில் எந்தவொரு இயக்குநருக்கும் இப்படி ஒரு அழுத்தம் ஏற்படக்கூடாது என்று விரும்புகிறேன். இப்போது எங்களுக்குத் தேவையெல்லாம் உங்கள் அன்பு மட்டுமே. அதை நான் வாழ்க்கை முழுக்கப் பாதுகாப்பேன்.

எங்களுடைய ‘க்ராக்’ உங்கள் முன் இருக்கிறது. இந்தப் படத்துக்காக ஏராளமான சவால்களையும், கடினங்களையும் சந்தித்துள்ளோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி".

இவ்வாறு கோபிசந்த் மாலினெனி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்