சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில்

By செய்திப்பிரிவு

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் அகில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'அதிதி', 'கிக்', 'ஓசரவள்ளி', 'ரேஸ் குரோம்', 'கிக் 2', 'துருவா' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுரேந்தர் ரெட்டி. இறுதியாக சிரஞ்சீவி நடிப்பில் வெளியான பிரம்மாண்ட படைப்பான 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

'சைரா' படத்துக்குப் பிறகு சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், எதுவுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதனிடையே, மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'சரிலேரு நீக்கவெரு' படத்தை தயாரித்த ஏ.கே.எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார். நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் த்ரில்லர் பாணியில் இருக்கும் எனவும், பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்