'அய்யப்பனும் கோஷியும்' இயக்குநர் சச்சி கவலைக்கிடம்

By செய்திப்பிரிவு

'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் இயக்குநரான சச்சி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தை இயக்கியவர் சச்சி. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது. ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சச்சி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஜூபிளி மிஷன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சச்சியின் உடல்நிலை குறித்து ஜூபிளி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"16 ஜூன் 2020 அன்று, சச்சிதானந்தனுக்கு, மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பின் மாரடைப்பு ஏற்பட்டது. பின்பு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வேறு மருத்துவமனையிலிருந்து ஜூபிளி மிஷன் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வென்டிலேட்டர் மற்றும் மற்ற மருத்துவ உதவிகள் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்களும் அவரது சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர். அவரது நரம்பியல் செயல்பாடு குறைவாக உள்ளது. மூளைக்குச் செல்லும் பிராண வாயு தடைப்பட்டுள்ளதால் மூளையில் பாதிப்பு இருப்பதும் சிடி ஸ்கேனில் தெரியவந்துள்ளது. 48-72 மணி நேர சிகிச்சைக்குப் பின்னரே அவர் நிலை குறித்துக் கணிக்க முடியும்"

இவ்வாறு ஜூபிளி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மலையாளத் திரையுலகில் பிரபலமான கதாசிரியர் சச்சி. சேது என்பவருடன் இணைந்து எழுதிய 'சாக்லெட்' என்ற படம் வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து 'ராபின் ஹூட்', 'மேக் அப் மேன்', 'சீனியர்ஸ்' ஆகிய படங்களுக்கு இணைந்து சேது - சச்சி ஜோடி பணிபுரிந்துள்ளது. இறுதியாக 'டபுள்ஸ்' படம் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து இந்த இணை பிரிந்தது.

சேதுவோடு இணைந்து எழுதியது மட்டுமன்றி, 'ரன் பேபி ரன்', 'அனார்கலி', 'ராமலீலா' உள்ளிட்ட படங்களுக்கு சச்சி தனியாகவும் கதை எழுதியுள்ளார். 2015-ம் ஆண்டு ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார் சச்சி. சமீபத்தில் 'அய்யப்பனும் கோஷியும்' படத்தை இயக்கியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

21 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்