லிடோ நடனக் கலைஞர்களுடன் அல்லு அர்ஜுன் நடனம்

By செய்திப்பிரிவு

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பாடலுக்காக லிடோ நடனக் கலைஞர்களுடன் அல்லு அர்ஜுனை நடனமாட வைத்துக் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன. இந்தப் படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என அறிவித்து, விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமன் இசையமைத்து வரும் படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டுமே சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

முதலாவதாக தமன் இணையில் சித் ஸ்ரீராம் பாடிய 'சாமஜவரஹமனா' என்ற பாடல் இணையத்தில் பெரும் வைரலானது. இதனைத் தொடர்ந்து இதனை வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்த என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் இறங்கியது படக்குழு.

இறுதியாக பாரீஸ் உள்ள லிடோ நடனக் கலைஞர்களை வைத்துக் காட்சிப்படுத்தியுள்ளனர். லிடோ நடனக் கலைஞர்கள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். அவர்களோடு அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே இருவரையும் ஆட வைத்துப் படமாக்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் ஒருவருடைய படம் லிடோ நடனக் கலைஞர்களோடு நடனமாடிக் காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டன. இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவுள்ளதாகவும், அதுவும் விரைவில் முடிவடையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்