பிரபாஸ் கூறிய மாற்றம்: பூஜா ஹெக்டே புதிய படத்தில் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

பிரபாஸ் கூறிய மாற்றத்தால் அவரது 'ஜான்' படம் தாமதமாகிறது. இதனால் வேறொரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சாஹோ'. பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், அதை மீறியும் இந்தப் படம் போட்ட முதலீட்டை எடுத்தது.

இந்தப் படத்துக்காக வந்த விமர்சனங்கள் அனைத்தையும் பிரபாஸ் பார்வைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். வெவ்வேறு முக பாவனைகள், காமெடி இல்லாதது என பல்வேறு குறைகளை இந்தப் படம் தொடர்பாக விமர்சகர்கள் எடுத்துரைத்தனர். இதனைக் கணக்கில் கொண்டு 'ஜான்' படத்துக்கு சில மாற்றங்களைச் செய்யச் சொல்லியுள்ளார் பிரபாஸ்.

'ஜான்' படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய படமாகும். இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு மட்டும் காமெடிக் காட்சிகளைச் சேர்க்கச் சொல்லியுள்ளார் பிரபாஸ். இதற்காக இயக்குநர் ராதா கிருஷ்ணா பணிபுரிந்து வருகிறார்.

இந்த மாற்றத்தால் 'ஜான்' படப்பிடிப்பு தாமதமாகியுள்ளது. இதனால் இதில் நாயகியாக நடித்து வந்த பூஜா ஹெக்டே புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாகார்ஜுனின் மகன் அகில் நடிக்கும் இந்தப் படத்தை பாஸ்கர் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

48 mins ago

வாழ்வியல்

57 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்