ரஜினி நடித்து அவரது மகள் இயக்கி மோஷன் காப்ச்சர் முறையில் எடுக்கப்பட்ட ‘கோச்சடை யான்' திரைப்படம் வரும் மே 9-ம் தேதி உலகமெங்கும் திரையிடப் பட உள்ளது. 6 மொழிகளில் வெளியிடப்பட உள்ள இத்திரைப் படம், தெலுங்கில் ‘விக்ரமசிம்ஹா' எனும் பெயரில் வெளியாக உள் ளது. இதற்கான ஆடியோ கேசட் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாதில் சனிக்கிழமை நடை பெற்றது.
ரஜினியின் நண்பரும் நடிகரு மான மோகன்பாபு பேசியபோது, உலகமே பாராட்டக்கூடிய திரைப் படத்தை எடுத்த சௌந்தர்யாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. என பேசினார்.
இயக்குனர் ராஜமௌலி பேசிய போது, கோச்சடையான் போன்ற திரைப்படங்களை எடுப்பது மிகவும் கஷ்டம். நான் இயக்கிய ‘நான் ஈ' திரைப்படம், இதில் நூறில் ஒரு பாகம் என கூறினார்.
ரஜினி பேசியதாவது: ‘பாபா' ஒரு ஆன்மிக படம். ‘சந்திரமுகி' ஓர் ஆவியைப் பற்றிய படம். ஆன்மிகத்தை பற்றிய படத்திற்கு பணம் வரவில்லை. ஆவி குறித்த படத்திற்கு பணம் கொட்டியது. கமல் மிகச் சிறந்த நடிகர். சினிமாவின் நவீன தொழில்நுட்பம் குறித்து மிகவும் ஆர்வம் கொண்டவர். கோச்சடையான் போன்ற தொழில் நுட்ப கதைகளில் கமல் நடிக்க வேண்டும்.
ஆனால் இது போன்ற சந்தர்ப்பங்கள் எனக்கு வருகிறது. ரானா படம் உடல்நலக்குறைவால் கைவிடப்பட்டபோது, கோச்சடை யானின் கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்து இருந்தது. ஆனால், இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட், சௌந்தர்யா எப்படி செய்வார் என நினைத்தேன். மிக அற்புதமாக இயக்கி உள்ளார்.”
இவ்வாறு ரஜினி பேசினார்.