நடிகையர் திலகம் அப்டேட்: ஜெமினி கணேசனாக நடிக்க துல்கர் சல்மான் ஒப்பந்தம்

By ஸ்கிரீனன்

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து உருவாகவுள்ள 'நடிகையர் திலகம்' படத்தில் ஜெமினி கணேசனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் துல்கர் சல்மான்.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்னிலைப்படுத்தி படமொன்றை இயக்க உள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின். இவர் பெரும் வரவேற்பைப் பெற்ற 'யவடு சுப்பிரமணியம்' படத்தின் இயக்குநர்.

இதில் சாவித்திரி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தில் சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மகளிர் தினத்தன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஜெமினி கணேசனாக நடிக்கவிருப்பது குறித்து எந்ததொரு தகவலுமே இல்லை. ஜெமினி கணேசனாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.

இறுதியில் ஜெமினி கணேசனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் துல்கர் சல்மான். இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

இந்தியா

10 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்