தமிழில் ரீமேக் ஆகும் பவித்ரம்: சிவகார்த்திகேயன், துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை

By ஸ்கிரீனன்

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பவித்ரம்', தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

1994-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் 'பவித்ரம்'. டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால், திலகன், ஸ்ரீவித்யா, ஷோபனா, ஸ்ரீனிவாசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் மோகன்லாலின் தாய் ஸ்ரீவித்யா தனது 50-வது வயதில் கர்ப்பமாகிறார். அதனைத் தொடர்ந்து என்னவாகிறது என்பதுதான் கதை. இக்கதையைப் போலவே இந்தியில் 'Badhaai ho' என்ற படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியில் வெளியான படம் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

தங்களுடைய கதையைப் பின்னணியாகக் கொண்டு மற்றவர்கள் படம் எடுத்து வெற்றியடைகிறார்கள். நாமே 'பவித்ரம்' படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்தால் என்ன என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.

இதற்காக சிவகார்த்திகேயன் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் யார் நடிக்கிறார்கள், யார் இயக்குநர் என்பதை முறையாக அறிவிக்கவுள்ளது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்