கருப்பு - வெள்ளையில் வெளியாகிறது மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’

By செய்திப்பிரிவு

சென்னை: மம்மூட்டி நடிக்கும் ‘பிரம்மயுகம்’ மலையாள திரைப்படம் ப்ளாக் அன் ஒயிட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘பூதகாலம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராகுல் சதாசிவம். அவர் அடுத்ததாக மம்மூட்டியை வைத்து இயக்கியுள்ள மலையாளப் படம் ‘பிரம்மயுகம்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மம்மூட்டியின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மம்மூட்டியைப் பொறுத்தவரை வித்தியாசமான கதைகளில் களமாடுவதில் ஆர்வம் கொண்டவர். தன்பால் ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த ‘காதல் தி கோர்’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ‘பிரம்மயுகம்’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஹாரர் படம் என்பதாலும், மம்மூட்டியின் தோற்றமும் படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மற்றொரு ஸ்பெஷலாக படம் முழுக்க ப்ளாக் அன் ஒயிட்டில் இருக்கும் என வெளியாகியுள்ள தற்போதைய அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் இம்மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இப்படத்தை நைட்ஷிப்ட் ஸ்டூடியோஸ், ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்தில் அர்ஜூன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

க்ரைம்

11 mins ago

தமிழகம்

17 secs ago

கல்வி

8 mins ago

உலகம்

19 mins ago

இணைப்பிதழ்கள்

33 mins ago

க்ரைம்

38 mins ago

க்ரைம்

45 mins ago

உலகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

மேலும்