இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு மலையாள படமான ‘2018’ தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரவேற்பை பெற்ற ‘2018’ மலையாள திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளது.

96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு மலையாள படமான ‘2018’ அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு (The Film Federation of India) அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (The South Indian Film Chamber of Commerce) இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தேர்வுக்குழுவின் தலைவரான கிரீஷ் காசரவள்ளி பேசுகையில், “காலநிலை மாற்றம் தொடர்பான பொருத்தமான கதைக்கருவுடன், சமூகத்தின் வளர்ச்சியை புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘2018’ திரைப்படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளது” எனத் தெரிவித்தார். கிரீஷ் காசரவள்ளி தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் இந்தப் படத்தை அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

‘தி கேரளா ஸ்டோரி’, ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’, ‘மிஸ்டர் சாட்டர்ஜி விஎஸ் நார்வே’, ‘பாலகம்’ (தெலுங்கு), ‘ஆகஸ்ட் 16, 1947’, வால்வி (மராத்தி), பாப்லியோக் (மராத்தி) உள்ளிட்ட படங்கள் பரிந்துரைப் பட்டியில் இருந்த நிலையில் ‘2018’ திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பினர் தேர்வு செய்துள்ளனர். 95-ஆவது ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத்தி படமான ‘தி செல்லோ ஷோ’ திரைப்படம் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2018: ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் படம் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் ரூ.200 கோடி வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

54 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்