ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கன்னுக்கு பிடித்த ஆமிர் கான் படம்

By ஏஎன்ஐ

'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி', 'தி சூஸைட் ஸ்குவாட்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் கன், தனக்குப் பிடித்த பாலிவுட் திரைப்படம் பற்றிக் கூறியுள்ளார்.

மார்வல் சூப்பர்ஹீரோ பட வரிசையில் 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' படங்களுக்கென தனி இடம் உண்டு. முதல் இரண்டு பாகங்களை இயக்கியதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது பாகத்தையும் இயக்கவிருக்கிறார். இது தவிர டிசியின் சூப்பர்ஹீரோ படமான 'தி சூஸைட் ஸ்க்வாட்' படத்தையும் ஜேம்ஸ் கன் இயக்கியுள்ளார். இந்த வருடம் ஆகஸ்ட் 6-ம் தேதி திரையரங்குகளிலும், ஹெச்பிஓ மேக்ஸ் தளத்திலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் ஜேம்ஸ் கன் உரையாடி வருகிறார். சமீபத்தில் அப்படியான ஒரு உரையாடலில் ஒரு ரசிகர், 'நீங்கள் இந்தியப் படங்களைப் பார்ப்பீர்களா?' என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்திருக்கும் ஜேம்ஸ் கன், ''பல படங்கள் பார்த்திருக்கிறேன். லகான் எனக்கு மிகவும் பிடித்தத் திரைப்படம்'' என்று கூறியுள்ளார். இது பாலிவுட் ரசிகர்கள் பலருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 2001ஆம் ஆண்டு வெளியான 'லகான்' இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியமான படமாக இருக்கிறது. அஷுதோஷ் கோவரிகெர் இயக்கத்தில் ஆமிர் கான், க்ரேஸி சிங், ரேஷல் ஷெல்லி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை ஆமிர் கானே தயாரித்திருந்தார்.

மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு 2002-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் இறுதிப் பரிந்துரைப் பட்டியலிலும் இடம்பெற்றது. ஆனால் வெற்றி பெறவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

விளையாட்டு

10 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்