கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்

By ஐஏஎன்எஸ்

இசைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது ‘கிராமி’ விருது. 1959ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலில் ஜஸ்டின் பீபரின் நான்கு ஆல்பங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இந்த பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் ஜஸ்டின் பீபர் விழாக் குழுவினருக்கு கடிதம் ஒன்றை எழுதி அதை தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய திறமையை கண்டுணர்ந்து பரிந்துரை செய்தமைக்கு நான் தலைவணங்குகிறேன். நான் என்னுடைய இசை குறித்து மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறேன். அந்த வகையில் ஒரு ஆர் அண்ட் பி (ரிதம்ஸ் அண்ட் ப்ளூஸ்) வகை ஆல்பம் ஒன்றை உருவாக்கினேன். என்னுடைய ‘சேஞ்சஸ்’ ஆல்பம் ஆர் அண்ட் பி வகையைச் சேர்ந்தது. ஆனால் அது பாப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது எனக்கு விநோதமாக உள்ளது.

நிச்சயமாக எனக்கு பாப் இசை மிகவும் பிடித்தமான ஒன்றுதான் என்றாலும், இந்த முறை இதை நான் அதற்காக உருவாக்கவில்லை. எனினும் என்னுடைய இசை மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்புக்கு நன்றிடையவனாக இருப்பேன். கிராமி விருதுக்கு என் பாடல்களை பரிந்துரை செய்திருப்பதை கவுரவமாகவும் கருதுகிறேன்.

இவ்வாறு ஜஸ்டின் பீபர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்