மீண்டும் முடிவை மாற்றிய கேன்ஸ் திரைவிழா ஏற்பாட்டாளர்கள்

By செய்திப்பிரிவு

உலகம் முழுக்க பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தனர்.

ஆனால், கரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் கேன்ஸ் திரைப்பட விழாவை திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கேன்ஸ் திரைப்பட விழாவை ஜூன் மாத இறுதியில் ஆன்லைன் நிகழ்வாக நடத்துவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த முடிவை மாற்றியுள்ளனர் கேன்ஸ் குழுவினர். கேன்ஸ் திரைப்பட விழாவை ஆன்லைன் நிகழ்வாக நடத்தும் முடிவைக் கைவிட்டுவிட்டு இந்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் நடைபெறவுள்ள திரைப்பட விழாக்களிலேயே கேன்ஸ் விழாவுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் படங்களைத் திரையிடவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கான படங்களைத் தேர்ந்தெடுக்கும் பணி வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கும் படங்களை ஒட்டுமொத்தமாகத் திரையிடாமல் தனித்தனியாக மற்ற திரைப்படவிழாக்களில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த திரைப்படங்கள் உலகம் முழுக்க நடைபெறும் திரை விழாக்களில் ‘கேன்ஸ் 2020’ என்ற குறியீடுடன் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்