ஊரடங்கு காலத்தில் பிரபல ஹாலிவுட் படக் காட்சிகளை மீளுருவாக்கம் செய்யும் தம்பதி

By செய்திப்பிரிவு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள், பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சிலர் என்ன செய்தென்று தெரியாமல் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் ஏதேனும் வீடியோ அல்லது புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியர், ஒருபடி மேலே சென்று பிரபலமான ஹாலிவுட் படங்களின் புகழ்பெற்ற காட்சிகளை, போஸ்டர்களை தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு மீளுருவாக்கம் செய்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன.

ஃபேன்னி மற்றும் நார்பெர்ட் எனும் பெயர்களைக் கொண்ட இந்த ஜோடி, ‘தி ஷைனிங்’, ‘மென் இன் ப்ளாக்’, ‘ராம்போ’, ‘ஸ்டார் வார்ஸ்’, ‘ஹாரி பாட்டர்’ உள்ளிட்ட பிரபலமான பல படங்களின் காட்சிகளை மீளுருவாக்கம் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

சினிமா

4 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்