'மேட்ரிக்ஸ்' அடுத்த பாகத்தில் பிரியங்கா சோப்ரா?

By செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள 'மேட்ரிக்ஸ் 4' திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1999 ஆம் ஆண்டு வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் ‘The matrix'. கீனு ரீவ்ஸ் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற தொழில்நுட்பங்களும், ஆக்‌ஷன் காட்சிகளும் அதுவரை திரையுலகம் காணாதவை.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு 'The Matrix Reloaded' என்ற படமும், அதே ஆண்டின் இறுதியில் 'The Matrix Revolutions’ என்ற படமும் வெளியாகி வெற்றியைக் குவித்தன. இப்படங்களை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனமும் வில்லேஜ் ரோட் ஷோ நிறுவனமும் இணைந்து தயாரித்தன.

ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு 'மேட்ரிக்ஸ்' அடுத்த பாகம் குறித்த அறிவிப்பை படத்தின் இயக்குநர்களான வக்காவ்ஸ்கி சகோதரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். இதில் கீனு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் 'மேட்ரிக்ஸ் 4' படத்தில் பிரியங்கா சோப்ராவும் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வில்லேஜ் ரோட் ஷோ நிறுவனம் பிரியங்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

'மேட்ரிக்ஸ் 4' தவிர்த்து நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'வீ கேன் பி ஹீரோஸ்’, 'தி வொயிட் டைகர்’, அமேசான் ப்ரைம் தயாரிப்பில் உருவாகி வரும் 'சிட்டடேல்’ ஆகிய படங்கள் மற்றும் சீரிஸ்களிலும் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

'மேட்ரிக்ஸ் 4’ படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

சினிமா

3 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

27 mins ago

க்ரைம்

33 mins ago

க்ரைம்

42 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்