மேட்ரிக்ஸ் அடுத்த பாகத்தில் நான் இல்லை - உறுதி செய்த ஹ்யூகோ வீவிங்

By செய்திப்பிரிவு

மேட்ரிக்ஸ் படவரிசையின் அடுத்த பாகத்தில் தான் நடிக்கவில்லை என்று நடிகர் ஹ்யூகோ வீவிங் உறுதி செய்துள்ளார்.

1999ஆம் ஆண்டு வக்காவ்ஸ்க்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் ‘The matrix'. கீனு ரீவ்ஸ் நடித்த இந்த படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்பங்களும், ஆக்‌ஷன் காட்சிகளும் அதுவரை திரையுலகம் காணாதவை.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ’The Matrix Reloaded’ என்ற படமும், அதே ஆண்டின் இறுதியில் 'The Matrix Revolutions’ என்ற படமும் வெளியாகி வெற்றியைக் குவித்தன.

இப்படங்களை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனமும் வில்லேஜ் ரோட்ஷோ நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தன.

ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்ரிக்ஸ் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பை படத்தின் இயக்குநர்களான வக்காவ்ஸ்க்கி சகோதரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். இதில் கீனு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ், ஹ்யூகோ வீவிங் உள்ளிட்டோர் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மேட்ரிக்ஸ் 4 படத்தில் நடிக்கவில்லை என்று ஹ்யூகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹ்யூகோ கூறியுள்ளதாவது:

’தி விஸிட்’ என்ற படத்தில் நடிப்பதற்காக தேதி ஒதுக்கிய பின்பு ’மேட்ரிக்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. என்னால் இரண்டு படங்களிலும் நடிக்க முடியும் என்று நினைத்தேன். ’மேட்ரிக்ஸ்’ படத்தில் நடிக்க எட்டு வாரங்கள் ஒதுக்கியதால் அந்த காலகட்டத்தில் ’தி விஸிட்’ படத்தில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் தேதிகள் தொடர்ந்து ஒத்துவராததால் இயக்குநர்கள் தங்களுடைய மாற்றிக் கொண்டனர். நான் இல்லாமல் படத்தை தொடர அவர்கள் முடிவு செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹ்யூகோ வீவிங் ‘மேட்ரிக்ஸ்’ படத்தின் முதல் மூன்று பாகங்களிலும் வில்லனாக நடித்து ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

’மேட்ரிக்ஸ் 4’ படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

21 mins ago

சினிமா

31 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்