சினிமா துளிகள் | உலகம் முழுவதும் ரூ.7000 கோடி வசூலித்த அவதார் 2

By செய்திப்பிரிவு

> ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்த படம், ‘அவதார்’. அதன் 2ம் பாகம், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் கடந்த 16-ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியிடப்பட்ட, இந்தப் படம் இந்தியாவில், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் , மலையாள மொழிகளில் வெளியானது. படம் பற்றிய விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் இந்தப் படம், 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

> நடிகை ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார். இவர், ‘சான்டா கொடுத்த மிகப்பெரிய பரிசு ஜாக்கி’ என்று தெரிவித்துள்ளார்.

> கிரிக்கெட் வீராங்கனை ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை கதையான ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் அனுஷ்கா சர்மா.

> நடிகை மேக்னா ராஜ் ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

22 mins ago

தொழில்நுட்பம்

27 mins ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

கல்வி

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்