முதல் நாளில் ரூ.10 கோடி வசூலைக் குவித்த பாலிவுட் ‘விக்ரம் வேதா’

By செய்திப்பிரிவு

தமிழின் ரீமேக் வெர்ஷனாக பாலிவுட்டில் வெளியாகியுள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ.10 கோடியை வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இப்படத்தை 'விக்ரம் வேதா' பெயருடன் இந்தியில் இயக்கப்போவதாக படக்குழு அறிவித்திருந்திருந்தது. இதில், மாதவன் கதாபாத்திரத்தில் சயீஃப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனால், பாலிவுட்டில் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதன்படி படம் நேற்று (செப்டம்பர் 30) திரையரங்குகளில் வெளியானது. மேற்கு வங்கம், ஹைதராபாத், மைசூர், ஆந்திரா பகுதிகளில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், வட மாநிலங்களில் படத்திற்கான வரவேற்பு எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதன்படி பார்க்கும்போது படம் முதல் நாள் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் விடுமுறைகள் அணிவகுப்பதால் வசூல் கூடலாம் என திரை வர்த்தகர்களால் கணிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 5640 திரைகளில் வெளியான இப்படத்தின் பட்ஜெட் ரூ.175 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

சினிமா

19 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

56 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்