தலைசிறந்த 50 ஆசிய பிரபலங்கள்: முதலிடம் பிடித்த சோனு சூட்; பிரபாஸுக்கு ஏழாவது இடம்

By ஐஏஎன்எஸ்

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார்.

பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார்.

பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தார்.

சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் சோனு சூட்டுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஆந்திராவில் செயல்பட்டு வரும் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு சோனு சூட்டின் பெயரைச் சூட்டி கவுரவித்தது.

இந்நிலையில் லண்டனை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஈஸ்டர்ன் ஐ என்னும் நாளிதழ் ஒன்று ஆண்டு தோறும் சிறந்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் உலகின் சிறந்த 50 ஆசிய பிரபலங்களின் பட்டியலை அந்த இதழ் சமீபத்தில் வெளியிட்டது. அதில் நடிகர் சோனு சூட் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் ‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படத்தில் நடித்த தேவ் படேலுக்கு 4வது இடமும், நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு 6வது இடமும், பிரபாஸுக்கு 7வது இடமும் கிடைத்துள்ளது.

இது குறித்து சோனு சூட் கூறியுள்ளதாவது:

என்னுடைய முயற்சிகளை அங்கீகரித்த ஈஸ்டர்ன் ஐ இதழுக்கு நன்றி. கரோனா பரவலின் போது, என்னுடைய நாட்டு மக்களுக்கு உதவ வேண்டியது என்னுடைய கடமை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இதற்காக தான் நான் மும்பை வந்தேன். ஒரு இந்தியனாக நான் என்னுடைய கடமையைத் தான் செய்தேன். என்னுடைய கடைசி மூச்சு வரை இதை நிறுத்த மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

41 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்