இணையத்தில் வெளியான சுஷாந்த் சிங் மரணித்த புகைப்படம்: பிரபலங்கள் கடும் சாடல்

By செய்திப்பிரிவு

சுஷாந்த் சிங் மரணித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. திடீரென்று தற்கொலை செய்துக் கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சுஷாந்த் சிங் அவருடைய அறையில் மரணித்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பலரும் பகிரவே, வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி சமூக வலைதள பயனர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குஷ்பு, பாடகர் பென்னி தயால் உள்ளிட்ட பலரும் இதில் அடங்கும்.

மேலும், அந்தப் புகைப்படத்தை வெளியிட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்