பெண்களை முன்னிலைப்படுத்தும் தூம் 4

By ஸ்கிரீனன்

'தூம் 3' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 'தூம் 4' படத்தில் பெண்களை முன்னிலைப்படுத்தி காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஆமிர்கான், அபிஷேக் பச்சம், கத்ரினா கைஃப், உதய் சோப்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தூம் 3'. உலகளவில் ஆங்கில படங்களுக்கு இணையாக வசூல் செய்தது. இப்படத்தினைத் தயாரித்த யாஷ் ராஜ் நிறுவனம், 'தூம் 3' திரைப்படத்தின் வசூல் 500 கோடியைத் தாண்டி விட்டதாக அறிவித்தார்கள்.

'தூம் 3' படத்தினைத் தொடர்ந்து 'தூம் 4'க்கான பணிகள் துவங்கி இருக்கிறார்கள். இதற்கான கதை விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனம், 'தூம் 4' படத்தில் முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். முன்னர் 'தூம்' படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா இருவருமே ஜெய், அலி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களது போலீஸ் வேடத்தை ஜெய்ஸ்ரீ மற்றும் அலினா என்று பெயர் மாற்றி நாயகிகளை போலீஸ் வேடத்தில் நடிக்க வைக்க இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி வில்லனுக்கு பதிலாக வில்லி வேடத்திலும் முன்னணி நாயகி ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

முழுக்க நாயகிகளை முன்னிலைப்படுத்தி படமாக்கப்பட இருக்கும் 'தூம் 4' படமும் வசூல் சாதனை புரியுமா என்பது தான் பாலிவுட்டின் கேள்வி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

8 mins ago

க்ரைம்

43 mins ago

சுற்றுச்சூழல்

49 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்