2018: பாலிவுட்- சிறந்த 10 படங்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

2018-ம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுக்கு பெரிய சறுக்கலைக் கொடுத்தது என்றே கூறலாம். பெரிய பட்ஜெட், ஜாம்பவான்கள் கூட்டணி என்று அனைத்தும் இருந்தும் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்', 'ஜீரோ' ஆகிய படங்கள் மண்ணைக் கவ்வின.

ஆனால் எந்த வித ஸ்டார் வேல்யூவும் இல்லாத சிறிய பட்ஜெட் படங்கள் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் 2018-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களின் பட்டியல் இதோ...

1) அந்தாதுன் - Andhadhun

Andhadhunjpg100 

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான படம் 'அந்தாதுன்'. குருடனாக நடிக்கும் பியானோ கலைஞன் ஒருவன் ஒரு கொலையைப் பார்த்து விடுகிறான். அதன் பிறகு அவன் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளையும் அதைத் தீர்க்க அவன் எடுக்கும் முடிவுகளையும் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கும் படம். படத்தின் பட்ஜெட் ரூ.25 கோடி. படம் இதுவரை வசூலித்த தொகை ரூ.71 கோடி.

2) ராஸி - Raazi

100-Days-to-raazijpegpng100 

70களில்  காஷ்மீரில் வாழும் முஸ்லிம் பெண் ஒருத்தியைச் சுற்றி நிகழும் கதை. ஆலியா பட்டின் நடிப்பில் மேக்னா குல்ஸாரின் இயக்கத்தில் வெளியான படம். ஹரீந்தர் எஸ். சிக்கா என்பவர் எழுதிய ’Calling Sehmat’ என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. படத்தின் பட்ஜெட் ரூ. 40 கோடி. வசூலித்த தொகை ரூ. 120 கோடி.

3) அக்டோபர் - October

5T1A0131-1jpg100 

வருண் தவான் நடிப்பில் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் வெளியான படம் ’அக்டோபர்’. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மாணவரான டேனிஷ் என்கிற டேனுக்கும் அவரது தோழியான ஷியுலிக்கும் இடையேயான உறவை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கும் படம்.

4) காலி குலேயான் - Gali Guleiyan

Gali-Guleiyan-jpgjpg100 

அண்டை வீட்டாரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் சிறுமியைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் கதை. மனோஜ் பாஜ்பாயின் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம். புதுமுக இயக்குனர் திபேஷ் ஜெயினின் இயக்கத்தில் வெளியாகி விமர்சகர்களால் பாராட்டப்பட்ட திரைப்படம்.

5) முக்காபஸ் - Mukkabaaz

mukkabaaz-1jpgjpg100 

விளையாட்டுத் துறையில் படிந்திருக்கும் சாதியையும் அரசியலையும் அலசும் படம். 'கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்', 'தி அக்லி', 'தேவ் டி' ஆகிய படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப்பின் மற்றொரு தரமான படைப்பு.

6) மண்டோ - Manto

Mantojpg100 

மறைந்த எழுத்தாளர் ஹசன் சாதத் மண்டோவின் வரலாற்றை பேசும் படம். நவாசுத்தீன் சித்திக் நடிப்பில் நந்திதா தாஸ் இயக்கத்தில் வெளியான் இப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

7)  தும்பாத் - Tumbbad

Tumbbadjpg100 

ரஹி அனில் பார்வ், ஆனந்த் காந்தி, அதேஷ் பிரசாத் ஆகிய மூவரின் இயக்கத்தில் உருவான திகில் படம். கதை நிகழும் காலம் 1947. ஒரு பெண் கடவுளையும் அவருக்காக மனிதர்கள் எழுப்பும் கோயிலையும் சுற்றி நிகழ்கிறது கதை.

8)  ஸ்த்ரீ - Stree

Stree-film-stillsjpg100 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் ஆண்களை மட்டும் குறிவைத்து ஒரு பேய் தாக்குகிறது. இதனால் அந்த ஊரில் இருக்கும் ஆண்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். அப்படியே வந்தாலும் பெண்களின் ஆடைகளை அணிந்து வரவேண்டிய சூழல். 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்ட படம்.

9) பதாய் ஹோ - Badhaai Ho

BadhaaiHo1jpgjpg100 

கருக்கலைப்பைப் பற்றி பேசும் படம். தன் வயதான தாய் கர்ப்பமானதை ஜீரணிக்க முடியாத இளைஞனையும், அதனால் சமுதாயத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகளையும் அலசியுள்ளார் இயக்குனர் அமித் ரவிந்திரநாத்.

10) Mulk

THNAKjpg100 

இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஊரில் இருக்கும் ஒரு முஸ்லிம் குடும்பத்தைப் பற்றிய கதை. குடும்பத்தில் ஒருவர் தீவிரவாதிகளுடன் சேர்வதால் குடும்பத்துக்கு ஏற்படும் பிரச்சனைகளும், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதை விறுவிறுப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கும் படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

29 mins ago

க்ரைம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்