கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ ஜூன் 14-ல் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

மும்பை: கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ பாலிவுட் திரைப்படம் வரும் ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தாகத்’, ‘சந்திரமுகி 2’, ‘தேஜஸ்’ என அடுத்தடுத்த படங்களின் தோல்வியில் இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். வெற்றியை எதிர்நோக்கும் அவரின் அடுத்த படைப்பு ‘எமர்ஜென்சி’. இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் கங்கனா. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. படத்துக்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதமே முடிவடைந்தது.

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று படம் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை. நேற்று (ஜன.22) ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை கங்கனா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார். அதன்படி படம் வரும் ஜூன் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார்.

முன்னதாக, இப்படம் குறித்து பேசியிருந்த கங்கனா, “எமர்ஜென்சி என்பது இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம். இதனை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். வரலாற்று நிகழ்வை திரைப்படமாக்கியது மகிழ்ச்சி” என தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்