அக்.16-ல் சல்மான் கானின் ‘டைகர் 3’ ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

மும்பை: சல்மான் கான் நடித்துள்ள ‘டைகர் 3’ படத்தின் ட்ரெய்லர் வரும் அக்.16ஆம் தேதி வெளியாகிறது.

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்த படம் ‘ஏக் தா டைகர்’. 2012ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதில் இடம்பெற்ற சல்மான் கானின் ‘டைகர்’ கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதால், அதை வைத்து ‘டைகர் ஜிந்தா ஹே’ என்ற படம் 2017-ல் வெளியானது. இதனை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியிருந்தார். இதன் மூன்றாம் பாகமாக தற்போது ‘டைகர் 3’ உருவாகி வருகிறது. மணீஷ் சர்மா இயக்கும் இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். இப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ’டைகர் 3’ ட்ரெய்லர் வரும் அக்.16 தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘டைகர் ஜிந்தா ஹே’, ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘வார்’, ஷாருக்கானின் ‘பதான்’ ஆகிய படங்களில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சி என்று இப்படம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இப்படம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸின் ஓர் அங்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான ‘பதான்’ படத்தில் சல்மான் கானின் ‘டைகர்’ கதாபாத்திரம் ஒரு காட்சியில் இடம்பெறும். அதேபோல இனி வரும் படங்களில் முந்தைய படங்களின் கதாபாத்திரங்கள் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

க்ரைம்

38 mins ago

வெற்றிக் கொடி

49 mins ago

விளையாட்டு

46 mins ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்