மும்பையில் ஆட்டோவில் சென்ற கீர்த்தி சுரேஷ்

By செய்திப்பிரிவு

மும்பை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இதில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவண் நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் சார்பில்அட்லீயின் மனைவி பிரியா தயாரிக்கிறார். காளீஸ் இயக்குகிறார். இவர் ஜீவாநடித்த ‘கீ’படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு படப்பிடிப்பு முடிந்ததும், நடிகர் வருண் தவணும் கீர்த்தி சுரேஷும் ஆட்டோவில் வெளியே சென்றுள்ளனர். மும்பை சாலை ஒன்றில் ஆட்டோவில் செல்லும் அவர்களைப் பலர் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்